Français
English
தமிழ்
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில அந்தஸ்து கோரிக்கைப் பிரகடனம்
Posted Date: 21/02/2013
புதுச்சேரி மாநில
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின்
இரண்டாவது அரசியல் மாநாடு
பிப்ரவரி 20 2013

மாநில அந்தஸ்து கோரிக்கைப் பிரகடனம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே வழங்கிடுமாறு அகில இந்திய என்.ஆர். காங்கிரசின் மாநில மாநாடு ஒருமனதாக வலியுறுத்துகிறது.


புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய யூனியன் பிரதேசமாகும். பிரெஞ்சு கலாச்சாரத்தின்; ஒரு அங்கமாகவும் அறிவு செறிந்த இடமாகவும் புதுச்சேரி திகழ்கிறது. 1200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பின்னணியைக்கொண்ட புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்; 138 ஆண்டுகள் இருந்து பின்னர் 1954ம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த ஆசிய ஜோதி மாண்புமிகு பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் அந்த உரிமை வேட்கைக்கு குந்தகம் விளைவிக்காமல்ää புதுச்சேரியை பிரெஞ்சுக்கலாச்சாரத்தின் பிம்பமாகää ஜன்னலாகக் கருதி மத்திய அரசின் செல்லக்குழந்தையாக வைத்திருக்க வேண்டுமென்ற உயரிய பண்பின் அடிப்படையில் புதுச்சேரியை மத்திய அரசின் நேரடிப் பார்வையில் வைத்திருக்க வேண்டுமென்று விரும்பினார். அதன் காரணமாக யூனியன் பிரதேச சட்டம் 1963ன் கீழ் புதுவை ஒரு யூனியன் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பேணிட பண்டித ஜவகர்லால் நேரு அவர்களால்ää 30 சட்டமன்ற உறுப்;பினர்கள் மற்றும் 3 நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டசபையோடு கூடிய யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உருவாக்கப்பட்டது.


பின்தங்கிய நிலையில் இருந்த யூனியன் பிரதேசம் அதன் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் அதற்கான நிதி மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க விடுதலை இயக்க தலைவர்களும்ää மக்களும் சம்மதித்தனர். அந்த நேரத்தில் முழு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நியாயமும் கோரிக்கையும் எழவில்லை. ஆனால் காலப்போக்கில் புதுச்சேரியின்; சமூக அந்தஸ்து உயர்ந்தது பொருளாதார வளர்ச்சி மேலோங்கியது. ஆனால் அரசியல் அந்தஸ்து மட்டும் உயரவில்லை.

யூனியன் பிரதேசம் என்ற முறையில் புதுச்சேரி இந்திய குடியரசுத் தலைவரின் நேரடிப் பார்வையில் அவரது பிரதிநிதியான துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. யூனியன் பிரதேசத்தை நேரடியாக கண்காணிக்கும் பொறுப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம், அமைச்சரவை, முதலமைச்சர் ஆகியோர் இருந்தபோதும் அவர்கள் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இருக்கிறார்களே தவிர முடிவுகள் எடுக்கும் அதிகாரம் படைத்தவராக இல்லை. அரசின் அன்றாட நடவடிக்கைகளும் அதைச்சார்ந்த கோப்புகளும்ää கோப்புகளின் மீது முடிவெடுக்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கோää முதலமைச்சருக்கோ இல்லை. தமிழகத்திலோ அல்லது மற்ற மாநிலத்திலோ ஒரு துறையைச் சார்ந்த கோப்புகளின் மீது முடிவெடுக்கும் அதிகாhரம் அந்த அமைச்சருக்கு மட்டுமே உண்டு. தேவைப்பட்;டாலன்றி அந்த கோப்பு முதலமைச்சருக்குக்கூட அனுப்பப்படமாட்டாது. இது ஜனநாயகத்தின் முழு பண்பினை பறைசாற்றுகிறது. ஆனால், புதுச்சேரியின் அரசாங்கம் மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் ஒரு தனித்துறை போல செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அரசாங்க விதிகள், நிதி சம்பந்தப்பட்ட விதிகள், நியமன விதிகள் அனைத்துமே மத்திய அரசின்; விதிகளாக இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்; சொல்லப்பட்ட மாநில பட்டியலி;ல் உள்ள பணிகளைப்பற்றிய சட்டங்களை உருவாக்குவதற்குக்கூட மக்களால் தேர்;ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள் புதுவை யூனியன் பிரதேசத்தில் விரிவாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியின்; நிலைமைக்குத் தகுந்த ஒரு சட்டத்தை உருவாக்க



வேண்டுமென்றால் அதனைச் சட்ட மசோதாவாக உருவாக்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அங்கு ஒப்புதல் பெற்ற பிறகே சட்டமாக உருவாகிறது. இங்கு இருக்கக்கூடிய நீதி நிர்வாகம் கூட அண்டை மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை அலுவலர்களை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்குக்கூட கிடையாது. அதனை மத்திய பணி ஆணையாளர் ஆணையம்தான் செய்யவேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

புதுச்சேரியின் ஆண்டு வரவு-செலவு அறிக்கைக்கூட மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடுதான் புதுச்சேரி சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிதிநிலையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதற்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசால் புதுச்சேரிக்கு கொடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய பிரதிநிதிகள் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் அவற்றை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்குக்கூட உரிமையில்லை. அதைக்கூட புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீர்மானிக்கின்றனர். நிர்வாகத்தின் தலைவர் துணைநிலை ஆளுநராக இருப்பதால் புதுச்சேரி அரசில் செயல்படக்கூடிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் அவருக்கு விசுவாசமாக நடந்துகொள்கிறார்களே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அல்ல.

ஒரு மாநிலத்தில், எந்த அதிகாரிக்கு எந்த துறையை ஒதுக்கி பணி செய்ய வேண்டும் என்ற முடிவினை எடுக்க வேண்டியது முதலமைச்சர்தான். ஆனால் இங்கே தகாத காரணங்களைக்கூறி அந்த அதிகாரத்தையும் டெல்லியில் உள்ள அதிகார வர்க்கம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாக முடியவில்லை. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபெறுகிறது.


ஆரம்பகால கட்டத்தில் தாராளமான நிதி ஆதாரத்தை அளித்து வந்த மத்திய அரசு, 1991ம் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியின் காரணமாக படிப்படியாக புதுச்சேரிக்கு வழங்கிவந்த நிதியையும் குறைத்துக்கொண்டு வந்து, இன்றைக்கு புதுச்சேரியை ஒரு நிதிச்சிக்கலில் தள்ளிவிட்டிருக்கிறது. திட்டமிடாத வரவுசெலவு அறிக்கையில் உருவாகும் பற்றாக்குறை அனைத்தையும் மத்திய அரசு கொடுத்து வந்ததனால் ஒவ்;வொரு ஆண்டும் புதுச்சேரி அரசு ஒரு உபரி நிதிச்சூழ்நிலையை உருவாக்கியது. திட்ட செலவிற்கு மொத்த செலவில் 70% சதவீதத்தை மானியமாகவும் 30% சதவீதத்தை குறைந்த வட்டிகொண்ட கடனாகவும் அளித்து வந்தது. எனவேää திட்டமிட்ட வளர்ச்சியை நம்மால் எய்த முடிந்தது. ஒரு காலகட்டத்தில் திட்டமில்லா வரவு-செலவின் மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை மத்திய அரசு நன்கொடையாக வழங்கியது. ஆனால் சமீப காலத்தில் இதனைப் படிப்படியாகக் குறைத்து வந்து ஒவ்வொரு ஆண்டும் செலவின் வளர்ச்சியை 3% சதவீதமாகக் கணக்கிட்டு அதை மட்டுமே கொடையாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த 3 ஆண்டுகளில் திட்டமிடா இடைவெளி கொடையாக ரூபாய் 530 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. இது மொத்த செலவீட்டில் 18லிருந்து 20 சதவீதமாகும். மீதி உள்ள செலவினை, புதுச்சேரி அரசு தன்னுடைய சொந்த வருவாயிலிருந்து சமாளிக்க வேண்டியுள்ளது. 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் தனது 17000 பணியாளர்களுக்கு ரூபாய் 40 கோடியை சம்பளமாக வழங்க வேண்டிய நிலையிருந்தும் இதற்கான இழப்பீட்டையும் மத்திய அரசு வழங்கவில்லை. மின்சார அளிப்பில் ஏற்படும் இழப்பையும் மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. ஒத்துக்கொண்ட நிதியை ஏதாவது காரணத்தைக்காட்டி கொடுக்க மறுக்கிறது.

திட்ட செலவைப் பொறுத்த வரையில் 70% சதவீதமாக இருந்த மானியம் 30% சதவீதமாக குறைக்கப்பட்டது. 30% சதவீதமாக இருந்த கடன் அளவு 70% சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் புதுச்சேரி; அரசின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வந்ததோடு ஒவ்வொரு ஆண்டு திட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டினை செலவு செய்யமுடியாத நிலைக்கு புதுச்சேரி


தள்ளப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு கடன் கொடுக்கும் முறையை நிறுத்திவிட்டு வெளி அங்காடியில் கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அதற்காக 2006ம் ஆண்டு ஒரு பொதுக்கணக்கினை புதுச்சேரி அரசுக்கு உருவாக்கி கொடுத்து பல்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் நிலைய ஏற்படுத்தி விட்டது. அதனால் புதுச்சேரி இன்று ரூபாய் 4040 கோடி, அதாவது மாநில உற்பத்தியில் 30 சதவீதத்தை கடனாகப் பெற்றதனால், கடன்வாங்கும் வரம்பும் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவு கொடுத்த மத்திய அரசு கடைசியில் அதை 300 கோடியாக குறைத்துள்ளது. இப்படி மத்திய அரசு எதேச்சதிகாரமாக எடுத்த முடிவுகளினால் புதுச்சேரி அரசுக்கு வரலாறு காணாத ஒரு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கும் என்ற எண்ணம் பொய்த்துவிட்டது. யூனியன் பிரதேசமாக இருப்பதற்கான நிதிவசதி காரணமும் முற்றிலும் தோற்றுவிட்டது.

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ள புதுச்சேரி இன்றைக்கு அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம், பணியளார் அதிகாரம், நிதி அதிகாரம் ஏதுமின்றி தத்தளிக்கொண்டிருப்பது ஒரு மிகப்பெரிய முரண்பாடான விஷயம். ஒரு கூட்டாட்சி; தத்துவத்தின்கீழ் இயங்கும் இந்திய நாட்டில் மாநிலங்கள் பல்வேறுபட்ட அதிகாரங்களைப்பெற்று மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற இன்றைய சூழ்நிலையில் புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அனைத்து உரிமைகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாரைவார்த்துவிட்டு இருப்பது ஒரு மிகப்பெரிய ஜனநாயக முரண்பாடாகும். சட்டசபை இருக்கும் இடத்தில் யூனியன் பிரதேச அமைப்பும்;, யூனியன் பிரதேச அமைப்பு இருக்கும் இடத்தில், ஒரு சட்டமன்றமும் இருக்க முடியாது. சட்டமன்றம் இருக்கும் இடத்தில் ஒரு மாநில அரசு மட்டுமே இயங்க முடியும். இதுவே உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகப் பண்பாகும். சட்டசபை இல்லாத அந்தமான்-நிக்கோபார் தீவுகள் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கலாம். ஆனால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் உள்ள இடத்தில், அமைந்துள்ள ஒரு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படத் தேவையில்லை. அது ஒரு முழு


சுதந்திரம் பெற்ற தமிழகம் அல்லது கேரளா போன்ற முழு மாநிலமாகத் திகழ வேண்டுமென்றுதான் புதுச்சேரி மக்கள் விரும்புகிறார்கள். நாம் அடிமைகளாக இருந்தபோது, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று கோஷமிட்ட தலைவர்கள் வ. சுப்பையா, எதுவார் குபேர், அன்சாரி துரைசாமி, முத்துக்குமரப்ப ரெட்டியார், ஐ.கே. குமரன், பக்கிரிசாமி பிள்ளை ஆகியோரின் சிந்தனைகள் புதுச்சேரி மக்கள் மனதில் தற்பொழுது கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி உள்ளது. மக்களின் இந்த அபிலாஷைகளைத் தீர்த்து வைத்து அவர்களுடைய வளர்ச்சிக்கு பாடுபடுவதற்காகவே அகில இந்திய என்.ஆர்; காங்கிரஸ் பேரியக்கம் புதுச்சேரிக்கு முழுமாநிலத் தகுதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்துகிறது.

முழு மாநிலத்தகுதி கிடைக்கும்போது புதுச்சேரிக்கு இதுவரை கிடைக்காத, மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும். முழு அதிகாரம் பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு எல்லா அதிகாரங்களும் கிடைக்கப்பெற்று இந்தியாவின் 28 மாநிலங்களில் நிலவக்கூடிய ஜனநாயக ஆட்சி, 29வது மாநிலமாக புதுச்சேரியில் முதன்முதலாக மலரத்தொடங்கும். எல்லா சட்டங்களும் இங்கே உருவாக்கப்படுவதாலும், எல்லா முடிவுகளும் புதுச்சேரியில் எடுப்பதாலும் டெல்லிக்கு சென்று முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதங்கள் குறையும். பண விரயம் தடுக்கப்படும். அதிகார வர்க்கம் மக்கள் பிரதிநிதிகளுக்கு விசுவாசமாக நடந்து, மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். புதுச்சேரி மாநில அரசிற்கு கிடைக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு அடித்தள ஜனநாயகம் மலருவதற்கும் வாய்ப்பு ஏற்படும். நுண்ணிய திட்டங்கள் கிராம அளவில் உருவாக்கப்பட்டு நான்கு பிராந்தியங்களுக்கும் சமச்சீரான ஒரு வளர்ச்சியை உருவாக்கமுடியும். திட்டங்களை உருவாக்குவதற்கு புதுச்சேரிக்கு என்று ஒரு திட்டக்குழு உருவாக்க முடியும். இக்குழுவின் மூலமாக புதுச்சேரியில் சமூகநீதியுடன் கூடிய வளர்ச்சியை விரைவுபடுத்தமுடியும். மக்களின் சமூகநலத்திற்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தங்குதடையின்றி முடிவுகள் எடுக்கப்படும். புதுச்சேரிக்கென்று தனி பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டு எல்லா பணியிடங்களுக்கும் தாமதமின்றி உள்ளுர் மக்களுக்கே கிடைக்கும் வாய்ப்பை உருவாக்க முடியும். தேவைப்படின், ஒரு உயர்நீதி மன்ற அமர்வையும் புதுச்சேரியில் உருவாக்க முடியும்.


புதுச்சேரி மாநிலத்திற்கென்று ஒரு விவசாயக் கொள்கை, சுற்றுப்புறச்சூழல் கொள்கை, தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்போடு கூடிய இயற்கை வளங்களைப் பாதிக்காத வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும். சிறப்பு பொருளாதார மண்டலம், தடையில்லா வணிகத்தளம், சுற்றுலாத்தளம், ஆகியவற்றை உருவாக்க நமக்கே உரிமை கிடைக்கும். புதுச்சேரியில் பெரிய பிரச்சினைகளான வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் குறையும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இவை அனைத்தையும் விட சட்டரீதியாக நமக்கு கிடைக்கவேண்டிய நிதி உரிமைகள் புதுச்சேரிக்குக் கிடைக்கும். மத்திய அரசு ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் உருவாக்கும் நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிடைக்கும் ஒதுக்கீடு மற்ற மாநிலங்களைப்போல புதுச்சேரிக்கும் கிடைக்கும். தற்போது நிலுவையில் உள்ள 13வது நிதிக்குழு மாநிலங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. மத்திய அரசின் மொத்த வருவாயிலிருந்து 39.5% சதவீதத்தை இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அக்குழு வரையறுத்துள்ள காரணிகளின் அடிப்படையில் புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் நமக்கு 2013-14ம் ஆண்டு மட்டும் ரூ.640 கோடி வருவாயாக கிடைக்கும். இத்தொகையை திட்டவளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொண்டால் நாம் வெளி அங்காடிகளில் கடன் வாங்காமலேயே நமது திட்டத்திற்கான நிதியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

திட்டமில்லா பட்ஜெட்டில் இதனால் பற்றாக்குறை ஏற்பட்டால் அப்பற்றாக்குறையை இந்திய அரசியலமைப்புச் சடடம் விதி 275ன் கீழ் நமக்குத் தேவையான நிதியை அளிக்க நிதிக்குழு பரிந்துரைக்கும். இதுதவிர 12 தலைப்பின்கீழ் நிதிக்குழு தனிப்பட்ட வளர்ச்சிக்காக நன்கொடை நிதியை அளிக்கிறது. உதாரணமாக ஆரம்பக் கல்வி வளர்ச்சி, பேரிடர் நிவாரணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி நிதி, ஆரம்ப சுகாதார வளர்ச்சியை பெருக்குவதற்கான நிதி, சுற்றுப்புறச்சூழல் நிதி என்று நிதியுதவி கிடைக்கும். மேலும், ஒவ்வொரு துறைக்கும் தேவையான செலவுக்கேற்ற நிதியை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின்கீழ் மாநிலம் என்ற முறையில் பெற்றுக்கொள்ள முடியும். நமது வரி முறைகளை நமது தேவைக்கேற்றவாறு

மாற்றிக்கொள்வதற்கான உரிமை கிடைக்கும். இதுபோக உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து நேரடி உதவி பெற்று அதற்கான திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் நமக்கு உரிமை கிடைக்கும். இவற்றிற்கு மேல் புதுச்சேரி அரசின் சொந்த வருவாய் கடந்த காலங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 1999-2000ஆண்டில் ரூ.693.82 கோடியாக இருந்த மொத்த வரி வருவாய் 2010-11ம் ஆண்டு ரூ.3200 கோடியாக உயர்ந்துள்ளது. இது புதுச்சேரியின் வருவாய் அமைப்பு வலுவாக உள்ளதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசின் 80 சதவீத செலவினைச் சொந்த வருவாயிலிருந்து சந்திக்கக்கூடிய தன்னிறைவு நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, தேர்தல் அறி;க்கையில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும், நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த அனுகூலங்கள் எல்லாம் நாம் யூனியன் பிரதேசமாக இருப்பதால் இந்தாள் வரை மறுக்கப்பட்;டுள்ளது. எனவே, நமக்கு ஜனநாயக உரிமையை அளிக்கும் மாநிலத் தகுதி வரும்போது நாமே நம் காலில் நிற்கும் அளவிற்கு நிதி வசதி பெறலாம். எனவே மாநிலத் தகுதி பெற்றால் மத்தியில் இருந்து கிடைக்கும் தாராள நிதி உதவி கிடைக்காது என்று அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு இக்கட்டான சூழ்நிலையைத்தான் மத்திய அரசு உருவாக்கி உள்ளதே தவிர எதிர்காலத்தில் ஒரு வசதியான சூழ்நிலையை உருவாக்கும் என்ற எண்ணத்திற்கு இடமே இல்லை. யூனியன் பிரதேசமாக இருந்து கோவா மாநில தகுதி பெற்றபோது இப்படிப்பட்ட ஒரு ஐயம் ஏற்பட்டது. ஆனால் மாநிலத் தகுதி பெற்ற பிறகு அதன் அனுபவம் அந்த ஐயத்தை பொய்ப்பித்திருக்கிறது. அவர்களுக்கு நிதி நெருக்கடியோ, கஷ்டமோ ஏற்படாத வகையில் அவர்களுக்கு நிலைமை சாதகமாக உள்ளது, புதுவைக்கு மாநிலத் தகுதி கிடைக்கும்போது மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு அளித்துள்ள சலுகைபோல நாம் வைத்துள்ள ரூ.4040 கோடி கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். இல்லையென்றாலும் குறைந்தபட்சம் வட்டியாவது தள்ளுபடி செய்யப்பட்டு நாம் கொடுக்கவேண்டிய கடனின் காலக்கெடு நீட்டிக்கப்படும். குறைந்தபட்சம் நமது வட்டிச்சுமையாவது குறையும். தற்போதுள்ள ஆண்டுக்கு ரூ.500 கோடி என்ற வட்டிச்சுமை குறையும். நமக்கு பயனற்ற செலவைக் குறைத்துக் கொள்ளும்போது நிதி நெருக்கடிக்கான காரணங்கள்


மறைந்துவிடும். எனவே, மாநில தகுதி; பெறுவது எல்லா வகையிலும் உகந்தது என்பதை மக்கள் மனமார ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அதற்கான தருணமும் வந்துவிட்டது என்பதை அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பேரியக்கம் உளப்பூர்வமாக உணர்கிறது.

இந்த விஷயத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் அல்லது அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதற்கான காரணமும் கிடையாது. ஏனனெறால் 1987ம் ஆண்டிலிருந்து 2012 ஆண்டு வரை புதுச்சேரியின் சட்டமன்றத்தில் 11 முறை புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி கோரி ஒருமனதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், 9 முறை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, அஇஅதிமுக, இந்திய கம்யூனிஸ்; மார்க்சிஸ்ட், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ஜ.க மற்றுமுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு மாநிலத் தகுதி கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கான நியாயத்தை மத்திய அரசிடம் கூறியுள்ளன. புதுச்சேரி அரசு நியமித்த வல்லுனர் குழு, நிர்வாக, நிதி, பொருளாதார, சமூக சூழ்நிலைகளை எல்லாம் ஆராய்ந்து புதுச்சேரி மாநிலத் தகுதியை பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளது.

1993ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்திருந்த முன்னாள் பாரதப் பிரதமர் மாண்புமிகு பி.வி.நரசிம்ம ராவ் அவர்கள் மாநிலத் தகுதி கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று வாக்குறுதி அளித்தார். அப்போதிருந்த ராஜாங்க உள்துறை அமைச்சர் பி.எம். சையீது அவர்களும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் திரு.தேவகவுடா அவர்கள் தலைமையில் அமையப்பெற்ற அரசாங்கமும் இக்கோரிக்கையை பரிசீலனை செய்தது. அதற்குப்பிறகு அமைந்த பாஜக அரசும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எல்.கே.அத்வானி அவர்களும், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.மதன்லால் குரானா அவர்களும் புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.


இந்த பின்புலத்தில், இந்திய அரசின் உள்துறை நிலைக்குழு தற்போது மக்களவையில் எதிர்கட்சித் தலைவராக உள்ள திருமதி. சுஷ்மா சுவராஜ்; அவர்கள் தலைமையில் 2005ம் ஆண்டு ஜீன் 18ல் புதுவைக்கு வந்து அப்போது முதலமைச்சராக இருந்த திரு.ந.ரங்கசாமி அவர்களிடமும் மற்ற அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மாநிலத் தகுதி பற்றி விரிவான விவாதம் நடத்தினார். இந்த விவாதத்தின் அடிப்படையில் இக்குழு புதுச்சேரிக்கு சிறப்பு மாநில தகுதியை அளிக்கவேண்டும் என்று கூறியது. இக்குழுவின் அறிக்கையில் கூறியுள்ள முக்கிய கருத்து என்னவென்றால் யூனியன் பிரதேசம் என்ற அமைப்பு முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு முற்றிலும் தடையாக இருப்பதாலும், மக்களின் விருப்பங்கள் மதிக்கப்படவேண்டும் என்று கூறியதுதான். இதை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு புதுச்சேரிக்கு சிறப்பு தகுதியோடு கூடிய மாநில அந்தஸ்தினை வழங்கவேண்டும் என்று ஒருமனதாக சிபாரிசு செய்தது. இது உள்துறை அமைச்சக நிலைக்குழுவில் 121 அறிக்கையில் இடம்பெற்று நாடாளுமன்ற மக்களவைக்கு 2006ம்ஆண்டு ஆகஸ்டு 2ம்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இதுதவிர இந்திய அரசால் நியமிக்கப்பட்ட 11வது நிதிக்குழு இக்கோரிக்கைக்கு வலு சேர்க்கும்வகையில் சிபாரிசு செய்துள்ளது.

எனவே, புதுச்சேரியை ஆளுகின்ற உள்துறை அமைச்சகத்தின் நிலைக்குழுவே புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கவேண்டும் என்று முடிவெடுத்து பாராளுமன்றத்திற்கு தெரிவித்தபிறகு இதனை கால தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும் என்று அகில இந்திய என்ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் தீர்மானிக்கிறது. புதுவை மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒத்த கருத்தோடு இந்த கோரிக்கையை வென்றெடுத்து மாநிலத் தகுதியோடு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்றும், இந்தியாவில் புதுச்சேரி முதன்மை மாநிலமாகத் திகழ்வதற்கு மாநிலத் தகுதி; உறுதுணையாக இருக்கும் என்றும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பேரியக்கம் கருதுவதால் எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்துகிறது.

(V. பாலன்)
பொதுச் செயலாளர்