புதுவையில் ஒரு எம்.ஜி.ஆர்! கொள்கையில் இவர் காமராசர்! – மக்கள் சத்திரியன்
மக்கள் குறை கேட்பில் மாமன்னர் கட்சி கட்டுப்பாட்டின் கர்மவீரர் என்.ஆர். – மக்கள் சத்திரியன்
மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் ஒரு சாதனை சகாப்தம் – காரைக்குரல்
ஞானசித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் – சர்வ சக்தி
சித்தர்கள் வாழ்ந்த புதுவையில் நடமாடும் சி்த்தராக பிரகாசிக்கும் மக்கள் முதல்வர் – சர்வ சக்தி
Close
சித்தர்கள் வாழ்ந்த புதுவையில் நடமாடும் சி்த்தராக பிரகாசிக்கும் மக்கள் முதல்வர்

அதிகாலை நேரம்; சுப்ரபாத இசை; வேங்கட நாதனின் சன்னதி எப்போது திறக்கும்? என ஆயிரமாயிரம் கண்கள் பக்திப் பரவசத்துடன் ….. இது திருப்பதயில்.

அதிகாலை நேரம்; சலசலக்கும் மக்களின் பேச்சொலி; முதல்வர் ரங்கசாமின் வீட்டுக்கதவுகள் எப்போது திறக்கும் என ஆயிரமாயிரம் நெஞ்சங்கள் மகிழ்ச்சியின் ஏக்கத்துடன்.. இது புதுவையில்.

முதல்வர் கதவு திறக்கிறது, முதல்வர் வாசல் வந்தவுடன் எல்லோரையும் சிரித்த முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் அழகே தனி. வந்தவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்தும் வந்தவர்கள் குறைகளை கேட்டு உடனே ஆவண செய்யும் விதமும் அருமை என்றே சொல்லலாம்.

அவர் இளமை காலம் தொட்டே தேசப்பற்றும், காங்கிரஸ் பேரியக்கத்தின்பால் கொண்ட பக்தியும், கொள்கை பிடிப்பும், அவரை தன்னிகரற்ற புதுவை முதல்வராய் ஆக்கியுள்ளது என்பது மறுப்பதற்கன்று.

நாட்டு நலத்தையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவர் செய்யும் செயல்பாடுகள் மிகவும் போற்றதற்குரியது. புகழ்பாடும் புதுவை மண்ணில் வாழும் இளைய காமராசராம் எங்கள் முதல்வர். அவருக்கு இணை அவரே!

அவர் மக்களை மதிப்பதில் மனிதநேயம் கொண்டவர். அதன் பிரதிபலிப்பே புதுவை மக்கள் அவரைச் சட்ட பேரவைக்குத் தொடர்ந்து அமோக வெற்றியுடன் தேர்வு செய்து சரித்திர நாயகனாக இடம்பெறச் செய்தார்கள்.

புதுவையில் வாழும் நம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பேருதவியும், நற்பயன்களையும் செய்து வருகிறார். தியாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் தியாகசீலர் அவர் ஒருவரே, மேலும், சரித்திர நாயகரான நம் முதல்வர் புதுவை மக்களுக்குச் செய்து வரும் தொண்டுகள் கணக்கிலடங்கா!

ஏழை எளிய மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அளிக்கும் மாமனிதர். பள்ளி குழந்தைகள் பாலும் அருந்தி செழித்திட ஓங்கிய திட்டத்தை வகுத்த வள்ளலார். அவர் பேசும் பேச்சுகள் திகட்டாத தேனாய் இனிக்கும். அன்பொழுகும் வாக்கினில் என்றும் கனிவு உண்டு.

எங்கள் முதல்வர்
“காட்சிக்கு எளியன் கடுஞ்செல்லான் அல்லனேல்
மீகக்கூறும் மன்னன் நிலம்.”
என்னும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எளியவர். இதனை, புதுச்சேரி மக்கள் நேரில் கண்டும், பேசியும், பழகியும் உணர்ந்துள்ளனர். மக்களோடு மக்களாகப் பழகி மக்களுக்காக ஆட்சி நடத்தும் மக்கள் தலைவர் என்பதை யாரும் மறுக்க இயலாது.

வாழ்க முதல்வர்! வளர்க அவரிபணி!
புதுச்சேரி என்றவுடன் நினைவுக்கு வருவது அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில் இந்த வரிசையில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களையும் இணைத்துக் கொள்ளலாம். இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர், ஆனால் நீதிமன்றத்திற்கு சென்றதில்லை.

புதுவை மக்களால் ஏழை பங்காளன் என்றும், பெருந்தலைவர் காமராஜர் என்றும் போற்றப்படும் ரங்கசாமி தனது ஆட்சிக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக நிறைவேற்றிக்கொண்டிருக்கும் பல திட்டங்களை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

பெருந்தலைவர் காமராஜரைப் போலவே ஏழை எளிய மக்களிடம் ஈடுபாடு கொண்ட ரங்கசாமி பொதுமக்கள் அவரது இல்லத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, எந்த நேரமும் சந்திக்கலாம். வாயிற் காவலர்களோ, உதவியாளர்களோ தடுப்பதில்லை. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை இவரிடத்தில் எளிதில் வைக்கலாம். இவை எல்லாம் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு ஆன்மீகவாதியாக சமூக சேவகியாக அவரோடு தொடர்பு கொண்டிருக்கும் என்போன்றவர்கள் பார்வையில் அவருடைய ஏற்றமிகு செய்கைகள் பாராட்டத்தகுந்ததாக அமைகிறது.

ஒருமுறை புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ஒரு விழாவுக்காக சென்று இருந்த போது ஒரு வியத்தகு நிகழ்ச்சி நடந்தது. பொம்மைக் கண்காட்சியை திறந்து வைத்து வலம் வந்து கொண்டிருந்த அவர் முடித்தக்கொண்டு வெளியேறும் தருணத்தில் ஒரு தாய் ஒரு தந்தை தங்களது ஆறு வயது சிறுவனுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுவன் தன் தாயாரைப் பார்த்து அம்மா ரங்கசாமி ரங்கசாமி என்றான். எனக்கோ ஆச்சரியம் ஆறு வயது சிறுவனுக்குக் கூட இந்த மாநில முதல் அமைச்சரை அடையாளம் தெரிந்து இருக்கிறதே என்று வியப்பு அடைந்தேன்.

நான் அந்த பையன் அருகில் நின்று அவனை கவனித்தேன். அவனுக்கு ரங்கசாமியின் கை குலுக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பதாக தெரிந்தது. தூரத்தில் வந்த ரங்கசாமி இதை கவனித்து விட்டார். அந்த பையன் அருகில் வந்து “என்ன கை குலுக்க வேண்டுமா?” என்று கேட்டு விட்டு அவன் கையைப் பிடித்து கை குலுக்கிவிட்டுச் சென்றார். ஆறு வயது பையன் நெஞ்சிலே இடம் பிடித்த ரங்கசாமி இந்த மாநிலத்தின் அத்தனை பேர் நெஞ்சிலும் இடம்பிடித்து இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

கலியுகத்தில் வாழ்ந்து அற்புதம் நிகழ்த்திய அப்பா பைத்திய சுவாமிகள் ஆசியுடன் இப்போது புதுவையில் முதல்வர் ரங்கசாமி செயல்பாடு மகிழ்ச்சிக்குரியது.