புதுவையில் ஒரு எம்.ஜி.ஆர்! கொள்கையில் இவர் காமராசர்! – மக்கள் சத்திரியன்
மக்கள் குறை கேட்பில் மாமன்னர் கட்சி கட்டுப்பாட்டின் கர்மவீரர் என்.ஆர். – மக்கள் சத்திரியன்
மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் ஒரு சாதனை சகாப்தம் – காரைக்குரல்
ஞானசித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் – சர்வ சக்தி
சித்தர்கள் வாழ்ந்த புதுவையில் நடமாடும் சி்த்தராக பிரகாசிக்கும் மக்கள் முதல்வர் – சர்வ சக்தி
Close
ஞானசித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள்

கனவில் தோன்றி காட்சி தருவார் மக்கள் நினைத்த காரியத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி தரும் அற்புதம்

பாலப்பழம் இருக்கும் இடத்துக்கு ஈக்கள் எப்படியாவது வந்து விடும். பூக்களின் ஊறுகின்ற நறுமணத் தேனை உறிஞ்சுவதற்கு வண்டுகள் தேடி வரும். சர்க்கரை எங்கு சேமிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்தை அறிந்து, எறும்புகள் சாரி சாரியாக வந்துவிடும்.

இதற்கு என்ன காரணம்?

ஈர்ப்பு எங்கு இருக்கிறதோ, அங்குதான் நாம் கவரப்படுகிறோம்.அன்பும் ஈர்ப்புதான்; ஆன்மீகமும் ஈர்ப்புதான். காதலும் ஈர்ப்புதான்; காமமும் ஈர்ப்புதான்.

ஆக, எதன்பால் ஒரு மனிதன் ஈர்க்கப்படுகிறான் என்பதை வைத்தே அவன் எதிர்காலம் அமைகிறது. அவனது வாழ்க்கை பிரகாசமான சூரியன் போல் விளங்குமா இல்லை பிறை நிலவு போல் தேய்ந்து விடுமா என்பதை இந்த ஈர்ப்பே தீர்மானிக்கிறது.

அன்பாலும் பண்பாலும் அதிகம் ஈர்க்கப்பட்டு வளர்ந்தால், ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொள்கிறான். அதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்கிறான்.

இளமைக் காலத்தில் – எது நல்லது என்று இனம் காண முடியாமல் – தேவை இல்லாத ஆடம்பர விஷயங்களால் இன்றைய இளைஞர்கள் ஈர்க்கப்படுவது நிதர்சனம். அதர்மத்தின் பார்வையில் செல்ல நேர்வதால், சாஸ்திர தர்மங்களை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நல்லது எது என்று போதிப்பதற்கு அருளாளர்கள் இருந்தும், அவர்களது குரல் இளைஞர்களின் காதுகளில் ஏறுவதில்லை.

பாரத தேசத்தில் எண்ணற்ற மகான்கள் அவதாரம் செய்த்தற்குக் காரணம் உண்டு. ஏனென்றால், இது தர்ம பூமி; சாஸ்திர பூமி; ஆன்மீக பூமி.

மகான்கள் என்பவர்கள், இறைவனின் அபதாரங்களாகவும் தூதுவர்களாகவும் தோன்றினார்கள்.

இரண்யனின் மகனான பக்த பிரகலாதனே தனது அடுத்த பிறவியில் வியாசராஜராகவும், அதற்கடுத்த பிறவியில் ஸ்ரீராகவேந்திரராகவும் தோன்றினான் என்பது புராணம்.

ஆக, ஒரு மகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும் தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது.

அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க ஓர் அவதாரம்தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள்.

தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள் கருவூர் கோட்டை ஜமீன் பரம்பரையில் 1859-ம் ஆண்டு சித்திரை மாதம் 28-ஆம் நாள் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். இவர் தமது 16-ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பழனி மலையடைந்து அங்கு தவத்திரு அழுக்கு சுவாமிகளைக் குருவாகக் கொண்டு ஞானம் கைவரப் பெற்றார். தம் குருநாதரின் மூலம் பலவற்றை அறிந்து கொண்ட இவர் ஓதாதுணர்ந்தவர் ஆவார்.

எல்லோரையும் ஒன்றுபோல் பாவிப்பது, யார் எதை ஆத்மார்த்தமாக கேட்கின்றார்களோ அதை தருவது இவரது சிறப்பு குணமாகும். ஏழை எளிய மக்களின் பசியினைப் போக்க அன்னதானத்தை ஆரம்பித்தார். பழுதுபட்ட ஆலயங்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்தல், ஏழை எளிய மக்களுக்கு திருமணம் நடத்திவைத்தல், தன்னை நாடி வரும் அன்பர்களின் மனக்குறைகளை நீக்குதல், சுவாமிகளின் இடைவிடாத அருட்செயல்களோடும் சுவாமிகள் தன்னையே பைத்தியம் என்று சொல்லிக்கொள்வார்கள். இதனால் பக்தர்கள் அவரை அப்பா என்று அழைத்தார்கள் அன்றிலிருந்து அவருக்கு அப்பா பைத்தியம் சுவாமிகள் என்று பெயர் வந்தது.

தனக்கென்று மடம் வைத்துக் கொள்பவனும் காசினை கையில் தொடுபவனும் தனக்கென்று ஒரு சீடரை வைத்துக் கொண்டிருப்பவனும் நான். எனது என்று பேசுபவனும் சந்நியாசி அல்ல சம்சாரி என்று வாழ்ந்தார்.

சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சூரமங்கலத்தில் சற்குரு மாளிகை (தருகவிலாஸ்) எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள் அசுவினி நட்சத்திரத்தில் ஜோதியில் கலந்தார்.

சுவாமிகள் சமாதி கோவில் சேலம் சூரமங்கலத்தில் விஷீ ஆண்டு ஐப்பசி திங்கள் 25-ஆம் நாள் 11.01.2001 அன்று தெய்வ தமிழ் முறைப்படி திருமுழுக்கு நீராட்டு விழா இனிதே நடைபெற்றது.

இன்றும் சுவாமிகள், பலர் கனவில் தோன்றி பல நற்செய்திகளையும் நல்ல பல அருளும் வழங்கி பலர் வாழ்வில் மறையாத தெய்வமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

சுவாமிகளை நாமும் நினைப்போம்.
வாழ்வில் வளம் பல காண்போம்.