புதுவையில் ஒரு எம்.ஜி.ஆர்! கொள்கையில் இவர் காமராசர்! – மக்கள் சத்திரியன்
மக்கள் குறை கேட்பில் மாமன்னர் கட்சி கட்டுப்பாட்டின் கர்மவீரர் என்.ஆர். – மக்கள் சத்திரியன்
மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் ஒரு சாதனை சகாப்தம் – காரைக்குரல்
ஞானசித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் – சர்வ சக்தி
சித்தர்கள் வாழ்ந்த புதுவையில் நடமாடும் சி்த்தராக பிரகாசிக்கும் மக்கள் முதல்வர் – சர்வ சக்தி
Close
மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் ஒரு சாதனை சகாப்தம்

புதுக்கட்சி தொடங்கிய அடுத்த மூன்றே மாதங்களில் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றிய சரித்திரச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் புதுச்சேரியின் இன்றைய முதல்வர் என்.ஆர்…, என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் என்.ரங்கசாமி. புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இவருக்குக கிடைத்த இந்த அபார வெற்றிக்கு அடிப்படை அவரால் அடையாளப்படுத்தப்பட்ட அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் என்கிற இயக்கமல்ல, என்.ஆர்.என்கின்ற தனி மனிதருக்கு புதுச்சேரி மக்கள் தந்துள்ள ஏகோபித்த ஆதரவே. மொத்த முள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 15 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் ரங்கசாமி தான் போட்டியிட்ட கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி முகம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இவரது கட்சி கையிழந்த ஏனாம் மற்றும் மாஹே ஆகிய இரண்டு தொகுதிகளும் அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்கிற காரணத்தால் அங்கு அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. இருப்பினும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி கண்டுள்ள என்.ஆர்.காங்கிரஸ் சுயேட்சை ஒருவரது ஆதரவுடன் அரசுக் கட்டிலில் அறியணையில் அமர்ந்துள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் மாநிலக்கட்சி ஒன்று முதன் முறையாக அரசாளும் பொறுப்பு ஏற்பது என்பதும் இப்போது நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளில் ஒன்று. பிரெஞ்ச் ஆதிகத்திலிருந்து விடுப்பட்ட புதுச்சேரியில் 1964-ல் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையாக காங்கிரசும், ஓரிரு சமயங்களில் அதிமுக மற்றும் திமுகவும் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்திருக்கின்றன.

ஆனால் புதுச்சேரிக்கென தனிக்கட்சி துவங்கிய யாரும் இதுவரை ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. 1980-ல் முதன் முதலில் அதிமுக சார்பில் புதுச்சேரி முதல்வராக இருந்த எஸ்.ராமசாமி தனிக்கட்சி தொடங்கினார். அந்த வருடம் நடைப்பெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியின் தலைவரான ராமசாமியால் கூட அத்தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் கண்ணன் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். 1996 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டார். இக்கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் திமுக-வின் ஜானகிராமன் தான் முதல்வர் ஆனார். இதே கண்ணன் மீண்டும் 2001-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பேரிலும், 2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற பேரிலும் புதுச்சேரி மாநிலத்திற்கென பிராந்திய கட்சியைத் தொடங்கினார். இவர் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தும் தேர்தல்களில் அவரது கட்சிக்கு புதுச்சேரி மக்கள் உரிய அஙகீகாரம் தர மறுத்துவிட்டனர். பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்த கண்ணன் கடைசியில் காங்கிரசிலேயே ஐக்கியமாகிவிட்டார்.

இத்தகைய தனிக்கட்சிகளின் தோல்வி வரலாறுகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தன் மாநில மக்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் பேரில் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். மக்கள் முதல்வர் ரங்கசாமி மாநிலத்தில் வலுவாக உள்ள காங்கிரஸ், திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய பலமான வாக்கு வங்கிகளைக் கொண்ட எதிர்கட்சினது கூட்டணியை தனிமனிதராக எதிர் கொண்டு முகவசிகரங்களை, பேச்சாள பெருமக்களை எல்லாம் நம்மால் தான் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை மட்டும் முன்நிறுத்தி இந்த அபார வெற்றியினைப் பெற்று இருப்பது பாராட்டுதலுக்கும், பிரமிப்பிற்கும், ஆச்சர்யத்திற்கும் உரியது. மாநில மக்களின் உணர்வுகளை, எண்ணங்கள் என்னவென்பதை ஆராயாமல் நாட்டின் தலை நகரிலிருந்து சொல் பேச்சு கேட்டு அரசியல் முடிவுகளை எடுக்கும் காங்கிரசின் அகில இந்தியத தலைமைக்கு புதுச்சேரி மக்கள் இம்முறை சரியான பாடம் புகட்டியுள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் மக்கள் மத்தியில் வளர்ச்சி பெரும் யாரையும் முண்ணிருத்துவது இல்லாத காரணத்தாளும் ஒரு சிலரின் பேச்சை கேட்பதாலும் சில மாநிலங்களில் தோல்விகண்டுள்ளது குறிப்பிடதக்கது. மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அவர்களை மக்களிடமிருந்து விலக்கிவிட முடியாது. என்பதற்கு வி.பி.சிங், சரத்பவார், மூப்பனார் என அநேக பிரதேசத் தலைவர்கள் அக்கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தங்கள் அரசியல் முடிவுகளால் பாடம் புகட்டியும் இன்னமும் அக்கட்சி தலைமை அதனை உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை. புதுச்சேரியில் அத்தகையப் பாடத்தை இப்போது மக்கள் முதல்வர் ரங்கசாமி புகட்டியுள்ளார். புதுச்சேரியில் நல்லாட்சி தந்து கொண்டிருந்த ரங்கசாமியை ஒரு திடீர்ப் பொழுதில் டெல்லிக்கு அழைத்தார்கள். முதல்வர் பதவியை ராஜினாமா செய் என்றார்கள். அதற்கான எந்தவொரு எந்தவொரு முகாந்திரமும் இல்லாத போதும் கட்சிக்கு கட்டுப்பட்டு ரங்கசாமி அதனை செய்தார். வெளியே வந்து நமது மாநில மக்களுக்கு நல்லது நடந்தால் போதும் என்று பதவி ஆசை இல்லாமல் புதுவை மாநிலத்தை பார்த்த ரங்கசாமி தொகுதி மக்களையும், தன்னுடைய ஆன்மீக பணி, விளையாட்டு பணியை தொடர்ந்தார். ரங்கசாமி்யின் நல்லாட்சி காலத்தில் மூன்று முறை சிறந்த மாநிலத்திற்கான விருதுகளை தொடர்ந்து தக்கவைத்து புதுச்சேரி்க்கு பெருமை சேர்த்தார். முதல்வர் மாற்றத்திற்கு பிறகு இடைப்பட்ட காலத்தில் இரண்டரை ஆண்டுகளில் இவ்வாட்சி மக்கள் மத்தியில் மக்கள் விரோத ஆட்சியா மாறியது. ஆனால் இதனை தலைமை கண்டுக் கொள்ளவில்லை. கட்சியில் இருந்து மேலும் மேலும் ஒதுக்கப்பட்டார். இதனைக்கண்டு வெகுண்ட புதுவை மக்கள் தனிக்கட்சி தொடங்குங்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தொடர்ந்து அழைத்தனர். தம் மக்களின் வேண்டுக்கோளை ஏற்று தேர்தலுக்கு இரண்டு, மூன்று மாதம் இருக்கின்ற நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். கட்சி தொடங்கப்பட்ட உடன் பிறகட்சிகளில் இருந்து என்.ஆர்.காங்கிரஸில் இணையத் தொடங்கினார்கள். அடுத்தக்கட்டமாக புதிய கட்சி என்.ஆர்.காங்கிரஸின் முதல் மாநாடு, இந்த மாநாடு புதுவை சரித்திரத்தை புரட்டிப்போட்டது என்றால் மிகையாகாது. இதற்கு காரணம் இதுவரை ஐந்து அல்லது பத்து நிமிடம் பேசிய மக்கள் முதல்வர் 3 மணி நேரத்திற்கு மேல் பல உண்மைகளை பேசினார். இதனைக் கண்ட சிலர் தோல்வி பயத்தில் நடுங்க ஆரம்பித்தனர். தேர்தல் வந்தது என்.ஆரையும், அவரின் வேட்பாளர்களையும் தோற்கடிக்க பலம் வாய்ந்த எதிர்கட்சிகள் தன்னுடைய கட்சித்தலைவர்களையும் குறிப்பாக சோனியா,ராகுல் என பெரும் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்து போன போதும் புதுவை மக்கள் காங்கிரஸின் மாயைக்கு முற்றுபுள்ளி வைத்தது. ஒன்று அல்லா இரண்டு தொகுதியில் நின்ற என்.ஆர்.அவர்களையும் 17-க்கு 15 என்ற இமாலய வெற்றியை என்.ஆர்.அவர்களுக்கு புதுவை மக்கள் காணிக்கையாக்கினார்கள்.மீண்டும் முதல்வர் ஆனார். டெல்லியிலிருந்து அழைப்பு வரும் போதெல்லாம் நான் பயந்தபடியே செல்வேன் என்று குற்ற மற்ற ஒரு மாநில முதல்வர் கூறுகிறார் என்றால் இத்தனை ஆண்டுகள், அகில இந்தியத் தலைமை அவரை எப்படியெல்லாம் பாடுபடுத்தியிருக்கும் என்பதனை நம்மால் ஊகிக்க முடிகிறது.

சுயமாக முடிவெடுத்துச் செயல்படக்கூடிய ஒரு முதல்வர் புதுச்சேரிக்கு முதல் முறையாக கிடைத்துள்ளது நமது பாக்கியமாகும். புதுச்சேரியில் தேர்தல் களம் கண்ட எதிர்கட்சி கூட்டணியினர் என்.ஆரை குறைத்து மதிப்பிட்டு இருந்தனர் என்பது அவர்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படையாக்த் தெரிந்தது. என்.ஆரை முதல்வராக தேர்ந்தெடுத்தால் அவரது தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மட்டும் தான் முதலாவராக இருப்பார் என்றெல்லாம் கொச்சை விமர்சனம் செய்தனர். அவர்களை சொல்லிக் குற்றமில்லை, இத்தனை ஆண்டாக அமைச்சராகவும், முதல்வராக இருந்த ஒருவர் மீது அவர்களால் ஊழல் புகார்களையோ, குற்றச்சாட்டுகளையோ கூற முடியாத போது பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள். இந்நிலையில் அடுத்த அம்பு வன்னியருக்கு மட்டும் பாடு படுகிறார். இதனால் காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட, தலித்தை முன்னிருத்தியது. இதையும் புதுவை மக்கள் ஏற்காமல் புதுவை மாநிலத்தில் உள்ள 5-தனித் தொகுதியில் 4-ல் என்.ஆர்.காங்கிரஸ்க்கும் ஒன்று இதன் கூட்டணி அதிமுகவும் வெற்றிப்பெற்றது குறிப்பிடதக்கது. அதாவது ரங்கசாமியின் மீதான மக்கள் செல்வாக்கிற்கு களங்கம் கற்பிக்க காங்கிரசார் எடுத்த முயற்சிகள் அனைத்து நிலைகளிலும் அவருக்கு சாதகமாக மாறியது. இதுநாள் வரை மக்கள் முதல்வர் என்ற பட்டத்துடன் உலா வந்தவர் இனி அப்பட்டத்திற்கு தான் மட்டுமே உரியவர் என்கின்ற பெருமையுடன் உலா வரலாம். புதுச்சேரி மக்கள் எப்போதும் உங்கள் பக்கம்.