புதுவையில் ஒரு எம்.ஜி.ஆர்! கொள்கையில் இவர் காமராசர்! – மக்கள் சத்திரியன்
மக்கள் குறை கேட்பில் மாமன்னர் கட்சி கட்டுப்பாட்டின் கர்மவீரர் என்.ஆர். – மக்கள் சத்திரியன்
மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் ஒரு சாதனை சகாப்தம் – காரைக்குரல்
ஞானசித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள் – சர்வ சக்தி
சித்தர்கள் வாழ்ந்த புதுவையில் நடமாடும் சி்த்தராக பிரகாசிக்கும் மக்கள் முதல்வர் – சர்வ சக்தி
Close
வெள்ளமென மக்கள் கூட்டம் தினம் தினம் தங்கள் குறைகளை நேரடியாகவும், விண்ணப்பங்கள் மூலமும் கூறி நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

– பயனாளிகளுக்கு மனைகளும் வீடுகளும் வழங்கப் படுகின்றன.

– கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மகளிர் மருத்துவமனை இரண்டு மாதங்களில் செயல்படுகிறது.

– மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ்., ஒதுக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படுகின்றன.

– இலவச அரிசி 35 கிலோ வழங்கப்படுகிறது.

– ஏ.எஃப்.டி மில்கள் இயங்குகின்றன. அவைகளுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதிய இயந்திரங்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. ஏ.எஃப்.டி மற்றும் அரசு மில்களில் தரமான நீடித்து உழைக்ககூடிய பாலீஸ்டர் புடவைகள் பல வண்ணங்களிலும் தரமான கைலிகளும், பொது மக்களுக்கு வழங்க தயாராகுகின்றன.

– மாணவச் செல்வங்களுக்கு தரமான உணவு, ரொட்டி, பால், சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

– தேர்ந்தெடுக்கப்படும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மின்னல் வேகத்தில் வேலைகள் நடக்கின்றன.

கடந்த ஆட்சியில் இவைகள் ஏன் நடக்கவில்லை???

யார் தடுத்தார்கள், ஐவரும் முதலமைச்சர் தான் என்றார்கள். ஆனால், ஐவரில் ஒருவர் கூட மக்கள் பணியாற்றுவதில் எங்கள் என்.ஆர்க்கு ஈடு இல்லையென என்பதை நிரூபித்துவிட்டார்கள். எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஒற்றுமையில்லை ஆளுக்கு ஒரு கோஷ்டியாக இருக்கிறார்கள். காமராஜர் பிறந்தநாள் விழா தெருச்சண்டையில் முடிந்தது. சேர்கள் பறந்தன. மத்திய அமைச்சர் படாத பாடுபட்டு சமாதானப் படுத்தினார். எங்கள் என்.ஆர். ஒற்றுமையுடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என்.ஆர் காங்கிரஸ் கட்சியினருடன் ஒற்றுமையாக கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதிலிருந்து உண்மையான காங்கிரஸ் எது, கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் எது என்று காங்கிரஸாரே பொது மக்களே சிந்திப்பீர். வாழ்க என்.ஆர் வளர்க அவர்தம் மக்கள் தொண்டு.