About NR

பண்புகளின் சிகரமாய் விளங்கும் பாரத நாட்டின் விடுதலைக்காகப் போராடிய அண்ணல் மகாத்மாகாந்தி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஏழை எளியவர்கள் நல்வாழ்வு வாழ்ந்திட தன் வாழ்நாள் எல்லாம் திட்டமிட்டு வாழ்ந்த தியாகச் செம்மல், காமராசர் வழியில் பாதை தவறாமல் பண்பு குறையாமல் உண்மை – உறுதி – சத்தியம் – நேர்மை – நிர்வாகத்திறமை – பெறுப்பு ஆகியவைகளின் மெத்த உருவம் மக்கள் முதல்வர் மாண்புமிகு N.ரங்கசாமி. B.Com., B.L., அவர்கள்.

தன்னலம் கருதாத தனது சேவையால், தொண்டால் உள்ளத்தால், உயர்வால், கள்ளங்கபடமற்ற தன்மையால் புதுவை அரசியலில் தமக்கென ஒரு தனிச்சிறப்பை பெற்றுத் திகழ்பவர். எல்லோருக்கும் உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், வேலை போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதே தன் லட்சியம் என்ற கொள்கைகையில் உறுதியாக இருந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காகத் தன்னை முழுமையாக அற்பணித்துக்கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் முதல்வர் N.R. அவர்கள்.

புதுச்சேரியில் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சிசெய்த ஏழு ஆண்டுகளில் ஏழை மக்களின் தேவைகளை உணர்ந்து அசுர வேகத்தில் அவர்கள் வாழ்வு உயர அயராது பாடுபட்டவர். அமைச்சர், முதலமைச்சர் என்றால் மக்களின் தெண்டர்கள் என்பது ஜனநாயக பண்பாடு. இதை நடைமுறையில் செய்து காட்டிய ஒரே முதல்வர் N.R. அவர்கள் தான். புதுவையின் முன்னேற்றத்திற்கும், நல்வாழ்விற்கும் அயராது உழைத்து மகத்தான தியாக வாழ்வு வாழ்ந்து புதுச்சேரியின் மிகச்சிறந்ததோர் தலைவர் “புதுவை காமராசராக” அனைவராலும் போற்றப்படும் மக்கள் முதல்வர் N.R. அவர்கள்

புதுச்சேரியில் இலட்சக்கணக்காணவர்களின் இதயத்தில் இன்று அவர் ஓர் “வாழும் காமராசர்” அந்த தங்கத் தலைவனின் பின்னே பெரும் பேரணி உண்டு. தீரம், தியாகம் ,உழைப்பு, உண்மை, ஒருங்கிணைந்த ஒரு உன்னதத் தலைவர் “வாழும் காமராசர் மக்கள் முதல்வர் “அவர்கள்.

சதா மக்கள் நலம், மக்கள் நலம், என இருப்போரை பிறந்த மண்ணையும், மக்களையும் நேசிப்பவர்களை அந்த மண்ணுக்குரிய நாடு நிச்சயம் நேசிக்கும். வரலாற்றின் நெடுங்கரங்கள் கைகளை நீட்டிக் காக்கவும் தயங்காது. அத்தகையோரை வாழ்த்திட நிச்சயம் கரங்கள் உயரும்!.

புதுவையில் இல்லாமை இல்லாதொழிந்திடவும் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கிடவும் மக்கள் முழுவாழ்வு பெற்றிடவும் மக்களின் பண்பாடு பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கவும், தன்னையே அற்பணித்துக்கொண்டவர். ஓயா பணியாற்றி வளர்ந்தவர். அயரா உழைப்பு அவரை உச்சாணியில் வைத்தது.

கோபுரத்தின் உச்சிக்கு சென்றவர்கள் படிகளை மறந்து விடுவது போல் சிலர் தேர்தலில் வெற்றிக்குக் காரணமான மக்களையே மறந்து விடுவதுண்டு. ஆனால் மக்கள் முதல்வர் N.R. அவர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்த புதுவை மக்களின் வாழ்க்கை வளம்பெற அவர்கள் வளர்ச்சிக்கு ஓயாமல் உழைத்துக்கெண்டிருக்கும் ஓயாத்தேனீ!.

புதுப்பொலிவோடும், புதுவலிவோடும், மகிழ்ச்சியுடன், எழுச்சியுடன் நல்லாசி நடைப்பெற்ற புதுவையில், மக்கள் முதல்வர் N.R. அவர்களின் ஆட்சியின்போது, புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பகுதிகளும் சமச்சீரான வளர்ச்சியடைந்தது.

மக்கள் முதல்வர் N.R. அவர்கள் முதல்வராக இருந்தபோது நல்லாட்சியே வழங்கினார்! நல்ல திட்டங்களையே வழங்கினார். தேர்தலுக்காக இல்லாமல் எப்போதும் போல் N.R. அவர்கள் மக்களின் “தரிசன யாத்திரையை” உற்சாகத்துடன் தொடர்ந்தே வருகிறார்.

நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மக்கள் முதல்வர் N.R. அவர்களுக்கு வலுவான மக்கள் ஆதரவும் எழுச்சியும் நாளுக்கு நாள் கூடி வருவதைக்கண்டு சபை ஏறி இருக்கும் சதிகாரக்கூட்டம், சாய்த்துவிட்டதாக நினைக்கும் குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு உதாரணமாக திகழும் சகுனிக்கூட்டம் சூது, சூழ்ட்சி, வஞ்சகம்,பொறாமை இவ்வகை திருக்கல்யாண குணங்களின் குன்றுகளாக திகழும் கூனிக்கூட்டம் நிலைக்குலைந்து நிற்கிறது.